இரு சக்கர இதயம், இன்றியமையாப் பயணம் இன்னிசையொன்று உதயமாகி, இளைய ராகம் பாடும் தூரம்
பருத்ததென்று பதராய் எண்ணி, பழையதொன்றுக்காய் பாத்திரம் வாங்கி, நிறுத்தாத நேர முள்ளொன்றைத் துரத்தி, தீர்க்கப்படா விடையொன்றாய் இறுதியில் - நாம்
இறுக்கிக் கொண்டிருக்கும் இரையும் தேவைகள், புத்திர பாசம் தொலைக்கும் புதிரான தேடல்கள், புதனென்றாலும், புதையலென்றாலும், விறைக்கும் நீலிப் பாசங்கள்
பார்த்தாயிற்று, பாழாயிற்று, பாரிய பகுதிகள் பழுதுமாயிற்று, பார் துறக்கும் வெட்க ரேகைககளை அடிவருடி பிதற்றும் சாமானியர்கள், - நாம்...
கருத்துகள்
கருத்துரையிடுக