தனிமை இனிமை தான்!

தனிமையின் திறந்த வெளியில் திசையறியாப் பறவை ஒன்று! சிறகுகளாய் உறவுகள் பல இருந்தும் பறக்க முடியவில்லை! சிறகுகள் சுமையானதாலா? இறகுகள் சுகம் சேர்ப்பதாலா? உறவுகளை உதறித் தள்ள ஒரு நொடி போதும்!

அந்த ஒரு நொடியிலே இதயம் சுக்கு நூறாகுமே! உதயம் ஆயிரம் இருந்தாலும் ஒன்றும் உருப்படியில்லை! எதுவும் நிரந்தரமில்லை!

நிரந்தரமில்லா வாழ்வில் நித்தமும் நிம்மதி தேடும் நித்திய ஜீவன்கள்! எட்டுத் திசையும் இருக்க எந்தத் திசையில் பறக்க எந்தன் சிறகு விரிக்க எதுவும் புரியாத புதிராகவே!

தனிமை இனிமை தான் வெறும் கவிதை வரிகளில்! வாழ்ந்து அனுபவிக்க அதன் கொடுமை தேளாய்க் கொட்டும்! தனிமை களைய கலையோடு போராடு! வாழ்வில் வென்றாடு!

எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா SLPS - 2 பஸ்யால

கருத்துகள்