ஆழ்துளை உன்னை வாழ்முடிவாக்கினாலும் பல நாள் நீ வாழ்வாய்.
கருகுழியால் உயிர் மீண்டு, தெருக்குழியால் உயிர்முடியும் உன்னை நினைத்து விழிக்குழியோரம் நீர்க்குமி வழிகிறது.
புழுதிமண்ணுடன் போராடவேண்டிய வயதில், புதைகுழிமண்ணோடு போராடி முடிந்தது வாழ்வுச்சங்கிலி
விண்கலம் ஏவும் பணியை நிறுத்தி, உலகக் கோப்பை வெல்லும். ஆசை நிறுத்தி, கணினி வழியாக உலகை ஆழும் அறிவுடமை நிறுத்தி, வல்லரசு பேசும் வாய்கள் நிறுத்தி, உயிர்த்தாகம் தீர்க்காத கண்டுபிடிப்புகள் நிறுத்தி,
விவசாயத்தை நவினமயப்படுத்தி, சுஜித்தின் இழப்புக்காய் சட்டசபையில் மௌனாஞ்சலி செலுத்தி மண்ணால் இனி எந்த உயிரும் மடியாது என தீர்மானம் நிறைவேற்றி. சுஜித் எனும் பெயரையாவது ஐ.நாவில் ஒலிக்கச்செய்யுங்கள். பிஞ்சுயிரின் பிரிவுக்காய் பிரார்த்திப்போம்.
கருத்துகள்
கருத்துரையிடுக