நகைச்சுவையான சுவாரஸ்யமான நிகழ்வொன்று
அமெரிக்கத் தொலைக்காட்சியொன்றில் ஊடகவியலாளர் ஒருவர் நேரடி செய்தி ஒளிபரப்பில் பங்கு பற்றிக் கொண்டிருந்தபோது அவரின் 4 வயது மகன் இடையூறு செய்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றது. எம். எஸ்.என்.பி.சி அலைவரிசையின் தேசிய பாதுகாப்பு நிருபர் கோர்ட்னி குபே, கடந்த புதன்கிழமை
நேரடி ஒளிபரப்பில் பேசிக் கொண்டிருந்தார் அப்போது அவரின் 4 வயது மகன் ரேயான் தன் தாயின் கவனத்தை ஈர்ப்பதற்காக இடையில் குறுக்கிட்டான். சிரியாவில் நடந்த துருக்கியின் வான் வழித் தாக்குதல்கள் குறித்து கோர்ட்னி குபே விபரித்துக் கொண்டிருந்த போதே, இச் சம்பவம் நடந்தது. குபேயின் மகன் ரியான் அவருக்குப் பின்னால் பதுங்கிக் கொண்டு வந்து தாயை தொட்டுப் பேசத் தொடங்கினான்.
அதையடுத்து, அந்த நேரடி ஒளிபரப்பின் போது, "மன்னிக்கவும், என்னுடைய மகன் இங்கே இருக்கிறான் என சிரித்துக் கொண்டே கோர்ட்னி குபே கூறினார்.
கோர்ட்னி குபே அதன்பின் பேசிய போது, "நான் மகனைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டேன். ரெயான் மகிழ்ச்சியாகவே இருந்தான். மைக்கை தள்ளி விட்டு விடுவானோ என்று பயந்தேன்" என்று கூறினார்
கருத்துகள்
கருத்துரையிடுக