ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபெல் என்பவரின் நினைவாக நோபல் பரிசு வழங்குவதானது 1895 தொடங்கப்பட்டு முதலாவது நோபல் பரிசு 1901 இலும் வழங்கப்பட்டது.
ஆல்ஃபிரட் நோபல் அவர்களின் உயில் மற்றும் அறக்கட்டளைக்கு அமையவே இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுக் கொண்டு வருகின்றது. அதற்கமைய மருத்துவம் அல்லது உடலியங்கியல், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகள் சார்ந்தவற்றிற்கே இப்பரிசு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இம்முறை மருத்துவத்திற்கான நோபல் பரிசானது மனித உடலின் செல்கள் குறித்த ஆய்வினௌ மேற்கொண்ட மூவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய அதனை அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் கெலின் மற்றும் கிரேக் செமென்சா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த பீட்டர் ரெட்கிளிப் ஆகியோர் பகிர்ந்து கொள்கின்றனர்.
அதேபோல இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு வழங்கப்படுகின்றது. பேரண்டம் (பெளதீக அண்டவியல்) குறித்த ஆய்வுக்காக ஜேம்ஸ் பீப்லஸுக்கும் சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்கள் குறித்த ஆய்வுக்காக மிசெல் மேயார் மற்றும் டிடியர் குயல்ஸுக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம்
•பீட்டர் ரெட்கிளிப் (இடது) •வில்லியம் கெலின் (நடுவில்) •கிரேக் செமென்சா (வலது)
இயற்பியல்
•மிசெல் மேயார் (இடது) •டிடியர் குயலஸ் (நடுவில்) •ஜேம்ஸ் பீப்லஸ் (வலது)
கருத்துகள்
கருத்துரையிடுக