மண்வாசத்திலிருந்து ஒருத்தியின் உள்ளக் குமுறல்!

அல்லாஹ்வே எனக்கேன்தான் ஆலிசமாய் வாழ்க்கையொண்டு பொல்லாத கக்கிஷத்த பொறுக்கிறன் நான் எவ்வளவுதான்

ஊசாட்டம் ஒண்டுமில்ல ஒணத்தி அத்தாப்போலிருக்காய் மாசாலம் என்னவென்று மனசுக்கு விளங்குதில்ல

காசாலென்றா பரிசாரம் கனக்கரிக்கி பார்த்திடலாம் பேசாம இரிக்கிறதன் பேரென்ன சொல்லு மச்சான்

பேசியத தரல்ல என்று பேசாம இருக்கிறயா லூசியாக்கிப் போட்டு என்ன லோசிச்சி நீ நடக்கிறயா

கருப்பியென்று தள்ளி வச்சி கசகறணப் படுத்துறயா கல்லாத பொடிச்சியெண்டு பொல்லாப்பா வெலகிறயா

என்னவென்று சொல்லாம என்ன நீ செய்யிறப்ப கொல்லாம கொல்லவதற்கு இவருக்கேதும் கூலிகொடு யாரப்பே!

ரோஷான் ஏ.ஜிப்ரி

கருத்துகள்