மயானமாகும் ஆள்துளை கிணறுகள்

சிறுவர் தினம், சிறுநீர் தினம் சிலிர்த்து போகிரது மனம் தினம் தினம் சிறைபிடித்தது ஆள்துளை கிணறு சிக்கித் தவிப்பது எமதான சுர்ஜித்

ஆக்ராவில் சோனு அங்கே குஜராத்தில் சவாதா ஒற்றை நாளில் சரிகாவும் சவுகானும் ஓய்ந்து போக வில்லை குமுறல்

பெரிய நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க பலர் பாரிய இழப்புக்கு பதில்கொடுக்க யார்? பராமரிக்கப்படாத பதாளக் குழிகளை பார்த்தும் பார்க்காமல் சிலர்

தனிமனித மெத்தனப்போக்கில் தினம் மயானமாகும் ஆள் கிணறுகள் துடிக்கத்துடிக்க உயிர்கள் பிரிகிறது தற்சமயம் இதுவும் கொலை

ஆளம் தெரியாமல் காலை விடாதே- இது அனைவர் அறிந்த பழமொழி ஆளம் தெரிந்த அரசு கூட அனிதமாய் சொல்கிறது தலைவிதியென்று

நூற்றுக்கணக்கான உயிர்கள் நூலில் சிக்கிய புலுவாக நிலைமை தெரிந்தும் நிழலாய் தொடரும் அலட்சியம்

மாநிலங்கள் வாய்திறக்கவில்லைதான் மனசாட்சி மௌனிப்பதேன் மறந்து போனதா இழப்புக்கள் மாற்றம் வேண்டும் இப்போதே

சுர்ஜித் மீட்கப்படலாம் நடுகப்பட்டியில் சர்ஜித் மீண்டும் விழலாம் மகாராஷ்டிராவில் சித்தரிப்பதை விட்டு விட்டு சற்று சிந்திக்க துவங்குவோம்....

Asana Akbar SEUSL Anuradhapura

கருத்துகள்