மஹ்ரம் அல்லாத அந்நிய பெண்ணுடன் கடிதம், குறுந்தகவல், call மற்றும் chat ரீதியான தொடர்புகளை ஏற்படுத்துவது தவறாகும்
அஷ் ஷைக் இப்னு உஸைமீன் -ரஹிமஹுல்லாஹ்- அவர்கள் கூறுகிறார்கள்:
"மஹ்ரம் அல்லாத அஜ்னபிய்யான பெண்ணுடன் கடிதம் (குறுந்தகவல், chat மற்றும் call) ரீதியான தொடர்பை ஏற்படுத்துவதில் ஃபித்னா (குழப்பம், பிரச்சினை) இருப்பதால் அவளுடன் இவ்வாறான தொடர்பை ஏற்படுத்துவது ஆகுமாகாது, சிலவேளை இத்தகைய தொடர்பை ஏற்படுத்துபவர் இதன் மூலம் எவ்வித ஃபித்னாவும் (குழப்பமும்) இல்லையென்று நினைப்பார், என்றாலும் அவள் இவருடனும், இவர் அவளுடனும் ஈர்க்கப்பட்டு ஒருவருக்கொருவர் தொடர்பாகின்றவரை ஷைதான் இவருடன் கூடவே இருப்பான். எனவே இளம் வாலிபர்கள் இளம் மங்கையர்களுடன் (கடிதம், குறுந்தகவல் ,chat, call) தொடர்பாடல்களை மேற்கொள்வதில் பாரிய விபரீதமும், ஃபித்னாவும் இருப்பதால் இச்செயலை விட்டும் தவிர்ந்து தூரமாகுவது வாஜிபாகும்." (நூல்: ஃபதாவல் மர்அதில் முஸ்லிமஹ் 3/578)
கருத்துகள்
கருத்துரையிடுக