தீபாவளியில் இப்படி ஒரு வலி வலி தீர்க்க வழி செய் இறைவா! ஆழ்துளைக் கிணற்றுக்குள் ஆழ்ந்து அமிழ்ந்துவிட்டதொரு உயிர்
தீயாய்ச் சுடுகிறது இறைவா... தீங்கே செய்யா சுர்ஜித் ஒருபுறம் தீங்கிலிருந்து மீட்க போராடும் கருணை உள்ளங்கள் மறுபுறம்!
மீண்டும் மீண்டு வா சுர்ஜித் முழு உலகமும் உனை மீட்க முழுதும் எதிர்பார்க்கிறது! முழு மனதோடு ஆவலில்!
கர்ப்பத்தில் கற்பாறையில் இருக்கும் உயிர்களுக்கு அபயம் அளிப்பவனே ஆழ்துளைக்குள் சிக்கிய சுர்ஜித்துக்கு அபயம் தா!
அவன் மீட்பை எதிர்பார்க்கும் அழகிய விடியலில் அதிஷ்டம் செய்! கர்ப்பத்தில் காப்பது போல் காப்பாற்றி தாயின் கரம் சேர்!
சுர்ஜித், உனை மீட்க "ரிக்" இயந்திரம் இயங்க திக் திக் என்கிறது எங்கள் இதயங்கள்! சீக்கிரம் சீக்கிரம் என்கிறது எங்கள் மனங்கள் ஏக மனதாய்!
இறைவா, இரண்டு வயது சிறுவனை ஆழ்துளைக்குள் செலுத்தி மனித மனங்களில் முளைத்த கொடிய எண்ணத்தை அழிப்பது தான் உன் அறிவுக் கூர்மையின் திட்டமோ
எங்கள் உதடுகள் சுருதி தப்பாமல் சுர்ஜித் சுர்ஜித் என்கிறதே! ஜாதி மத நிற பேதம் மறந்து மக்கள் விழிகள் நனைகிறதே!
சிறிய சிறுவன் சுர்ஜித்தின் வாழ்வை உதயம் செய்! ஆயிரம் சுர்ஜித்கள் வாழ இறைவனே இதயம் செய்
கருத்துகள்
கருத்துரையிடுக