யாரும் தேடாத் தேடல்

எச்சில் குழியலும் முத்தத் தடயமும் தொட்டுத் துடைக்கும் மழையே......

ஒரு விட்டம் என்னில் தினம் அர்த்தம் நிறை குடை சொட்டும் மழைத் துளி கதிர் அத்தம் விடுகிற நொடி.....

மலர்ச் செண்டில் மதுக் கொண்டை உடை என் நெஞ்சில் விழி நெஞ்சம் தரும் மஞ்சம் விரி......

காதல் கண்கள் படை என்னில் நுழை என் நுட்பம் எல்லாம் ஒரு சிற்பம் என நீ கண்டே எடு.....

பசி தொட்டுத் துடை ருசி மிச்சம் விடு என் அச்சம் போக இன்னும் சொச்சம் எடு.....

குளிர் காலம் இது குடை சாயும் இனி இடை தேயும் வரை ஒரு தேடல் தொடு......

நான் உன்னில் இனி நீ என்னில் விரி வேறு பாடு இங்கு ஏது என்றே தேடு.....

வா....யாழைத் தொட்டு யாதும் வாரு யாரும் இங்கே தேடாத் தேடல் நீயும் தேடு.....

க.ஷியா.

கருத்துகள்