ஊழி திரட்டி வன்மை செய்யும் என் அன்பின் இனிய வந்தனங்கள்.
தங்கம் தாலாட்டை தொலைத்த இரண்டாவது சிறுமை
தாயானவள் கொடு்த்த மடியிற்கு தானாக விளைந்த கொடுமை அது தான் முதுமை
தாராது இவ்வுலகு நேராகாது பாராது முதியவர் பெருமை இவ் வையகத்தில் எழுதித் தீராது.
நவீனம் நகர்த்தியது நிலாச்சோறு உண்ட காலத்தை மட்டுமல்ல நிலா காட்டி கதை சொன்ன மூத்தம்மாவின் ஞாபகத்தையும் தான்
மறந்து மறந்து நெஞ்சில் ஈரம் இறந்து விட்டது.
அதனால் தான் நாம் முதியோரில்லம் அனுப்பி விட்டு அவர்களின் பெருமை பேச விழா எடுத்தோம்
எருமைகள் அருமை மறந்திருக்கிறது செழுமைகள் ஆக்கித்தந்த முதியோருக்கு வருடத்தில் ஒரு தினத்தை நினைவேந்தலாய் ஆக்கி இருக்கிறது.
வேடிக்கை வேதாளம் முருங்கை மரத்தில்
வதைகளை அனுதினம் கண்டவர்களை வடிவாக்க ஒரு தினம் போதுமா மானிடா?
கோடிகள் கொடுத்தாலும் மாடிகள் நிறைத்தாலும் ஓலைக் குடிலில் கிடைத்த மன நிம்மதி எங்கடா? மானிடா
தங்கம் அது பழைய தங்கம் எம்மில் மூத்த கலப்பற்ற உண்மைத் தங்கம்
என்னில் மூத்தோருக்கு முதியோர் தின வாழ்த்துக்கள் முத்தாய் போய்ச் சேரட்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக