யார் குப்பை?

காகித குப்பைகள், காட்டும் பல பெட்டிகள் காலம் கடந்த குப்பைகள் கதை சொல்லும் குப்பைகள் கட்டி வைக்கப்பட்டன..

ஏட்டுக் குப்பைகள் ஏழைகளின் வாழ்வுகள் எஜமான்களின் வரலாறுகள் எலிகளிடம் மாட்டி எச்சில் பதித்த பக்கங்கள்..

ஊரில் தொடங்கி ஊழல் பொதிந்த உலகக் குப்பைகள் உதிரம் அதிர்ந்த உதட்டுக் குப்பைகள்..

மனிதச் சேதி மனிதரில் மாமிசச் சேதி மந்திரம் கலந்த பாதி மடையே ஆன, மக்களே குப்பைகள்!

இறக்குவானை அஸ்கர் வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்