வறுமையின் வரலாறு

வயிற்று பிழைப்புக்கு வழியில்லை வாய்திறந்து கேட்க மொழியில்லை வாசற்படியில் வீற்றிருக்கின்றனர் - யாரும் வரவேற்று உபசரிக்க போவதில்லை

தெருவெல்லாம் சொந்தம்தான் தருவெல்லாம் கட்டில்தான் தருபவர் கனவான் தந்ததை- பெறுபவன் வறியான்

வறுமை பணத்திலிந்தது அன்று வெறுமை மனித குணத்தில் இன்று..

வாழ்க்கையின் விடியல்- இறை விதித்தவன் மடியிலாம் விரித்த கைகள் - தினம் வியர்வையில் குளியல்

இன்னொரு புரம்

இருப்பவன் இறைப்பை இலஞ்சத்தில் நிறைப்பு இல்லாதவன் உழைப்பு இறுதியில் இறப்பு

ஆட்சிகள் மாறுகையில் ஆதரிப்பும் அன்பளிப்புமாய் அள்ளி இறைக்கையில் அல்லல் பட்டவன் மகிழ்ச்சியில்

நாட்கள் நகர்கையில் நம்பியவர் நாதியில்லை நடமாடும் பிணமாகிறான் நாளடைவில் தற்கொலை

சிந்தனையில் வறுமை சீராக வேண்டும் தலைமை தினத்தில் மட்டும் வறுமையென்றால் தினசரி ஏன் வாட்டம்

மாற்றங்கள் மண்ணில் மிளிர - புது தேற்றங்கள் வரைவோம் இன்றே

Asana Akbar Anuradhapura SEU of srilanka

கருத்துகள்