மறுமைக்காக மன்றாட வேண்டிய நாளில் இன்று Bigil திரைப்படத்துக்காய் போராடிக் கொண்டு இருக்கிறது எமது சமூகம்.
புனிதமான வெள்ளிக்கிழமை சுபஹுத் தொழுகையை முடித்த வண்ணம் சூரத்துல் கஹ்பை ஓதி முடித்தார்கள் அன்று எம் சமூகம்.
ஆனால் இன்று எம் சமூகம் புனித நாள் என்று அறிந்து Bigil திரைப்படத்தை பார்வையிட பேரணியாக ஒன்று சேர்ந்து முதல் வெளியீட்டில், முதல் திரை அரங்கில் படத்தை பார்வையிட அடி பிடி பட்டு ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு திரை அரங்கை அடைய பாடு பட்டு அதை அடைந்து கொள்கிறார்கள் அதோ பரிதாபம்.
அதே போன்று இந்த ஆர்வத்தை சுவர்க்கம் செல்லும் வழிகளில் ஆர்வம் காட்டினால் நாம் அனைவரும் சுவர்க்கத்தை நிச்சயம் அடைந்தே தீரமுடியும்.
ஏன் என்றால் இந்த அற்பமான உலகத்தில் அல்லாஹ்வால் வெறுக்கப்பட்ட ஒன்றை அடைவதற்கு முயற்சி செய்து கிடைக்கப் படும் போது நிச்சயமாக அல்லாஹ்வால் விரும்பப்படும் விடயத்தை அடைவதற்கு நாம் முயற்சி செய்தால் அல்லாஹ் அதனை இலகுவாக அடையும் பாக்கியத்தை எமக்கு நிச்சயம் தருவான்.
முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார்!
கருத்துகள்
கருத்துரையிடுக