தேர்தல் வந்துவிட்டால் தேடி வருவர் தனவந்தர்களாய் தோட்டத் தொழிலாளியின் தொழில் கூட கைபோடுவர்.
-தேதி முடிந்து விட்ட கணம்!
சொந்தக்காரனெல்லாம் சேனாதிபதியாம் சொத்துக்கள் பல தனக்கென பதிவாம் சொந்தவூரில் மட்டும் சேவை - அப்பாவி சமதாயம் நம்பி அங்கே வதை.
நம்மயல் நாடுகளுடன் நல்லுறவை பேணச்சொன்னது நாட்டுக்காகவே அன்றி நாட்டை விற்பதற்காக அல்ல.
வளர்கின்ற நாட்டில்தான் வளச்சுரண்டல் அதிகம் விளைகின்ற பொருளுக்கு விலைமட்டும் குறைச்சல்.
அடிமையாகவே வாழ்கிறோம் அடிமனதை தொட்டுக்கேள்! அதிகாரத்தின் கீழ் அகதிகளாய் அகராதியில் பேர் பொரிக்கிறோம்.
இலக்கியத்தை மீட்டிப்பார் இனவாதம் தெரியாதோர் கடாபியை இலங்கை மண்ணும் எதிர்பார்கும் இன்று முதல் எதிர்படும் வரை.
கொடி தூக்க முன் கொடுங்கோலைப் பற்றி யோசி விரல் நீட்டிய பின் விளைந்ததைப் பற்றி பேசி விடை தேடாதே-மீண்டும் வாக்களிப்பை எதிர்பார்த்து - அதற்கு வருடங்கள் கடக்கனும் மறக்காதே....!!!
கருத்துகள்
கருத்துரையிடுக