விழுதுகள் விட்ட ஓர் ஆலமரமாய் நானும் மாற ஆழக்குழி வெட்டி ஆணிவேராய் வளரும் வரை எனை- அரவணைத்து ஆயுளையே அர்பணித்தவர் "அப்பா"
அடுக்கிடும் வினாக்கள்- நானாய் அத்தனைக்கும் விடை தேடி அழுதிடுவாள் மகவென்றஞ்சி அழகாக பொய்யை புனைந்தததும் "அப்பா "
அக்கரையை நான் கேட்டாலும் - அதை இக்கரைக்கு கொண்டுவர அயராது பாடுபடுவது அக்கரையுள்ள " அப்பா"
எத்தனை பாதணி இருந்தும் - அன்று அளவில் பெருத்திட்ட அப்பாவின் பாதணியில் ஆளாதிப்பிரியம் ஏனோ??
ஆனால் இன்று பாதணியை பிடித்த பலருக்கு அப்பாக்களை பிடிக்குதில்லை
மெழுகு காற்றில் அனைவதுண்டு அனையா மெழுகுவர்த்தியொன்றும் உண்டு அதுவும் "அப்பா " என்றால் மிகையல்ல
அனுபவங்களின் தொகுப்பும் அப்பா ஆயுள் முழுக்க உழைப்பதும் அப்பா அரவணைப்பில் ஆட்சி செய்பவரும் அப்பா
அடுக்கு மாளிகை விட அப்பாவின் அரவணைப்பொன்றே போதும் அன்றும் என்றும் -நான் அரசியாய் வாழ
கருத்துகள்
கருத்துரையிடுக