உயிருக்காக போராடிய அந்த அரைமணிநேரம்....!

மறக்க முடியாத அனுபவம்

“காலை பத்து மணி போல் இருக்கும். காரியாலயம் செல்ல தயாராகிக்கொண்டு மூன்றாமாடியிலிருந்து மின் தூக்கிக்குள் (Lift) சென்றேன். மின் தூக்கியும் கீழே இறங்கியது. அப்போது திடீரென்று மின் தூக்கி இருட்டறையாகிவிட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டதா...? ஒன்றும் புரியவில்லை.

“ஐ..ஐயோ...! இப்ப என்னடா செய்றது...?” உடனே இறைவனை ஞாபகப்படுத்தி, “இன்னாலில்லாஹி வ.இ.ரா....” என்று ஓதிக்கொண்டேன். மின்சாரம் வந்துவிடும்...! கதவு திறபடும்! என்ற நம்பிக்கையோடு சிறிது நேரம் காத்திருந்தோன். காத்திருப்பு தோல்வியை கண்டது. உள்ளத்தில் அச்சம் நிலைகொண்டது.

ஆன்டி(Auntie)...! ஐயா...! அக்கா....! அண்ணா....! என்று அப்பார்ட்மன்டில் (Apartment) இருக்கும் அனைவரையும் அழைத்து கத்தினேன். எந்த பதிலும் கிடைக்கவில்லை. முழுமையான இருள். நெஞ்சு படபடக்க ஆரம்பித்து. வியர்வை ஆறாய் ஓடத்தொடங்கியது. தொலைபேசியால் வீட்டில் இருக்கும் ஆன்டியை தொடர்பு கொள்ள முயன்றபோது முடியவில்லை. Lift க்குள் Coverage வருவதில்லை. கொஞ்சம் Network Connection வந்தவுடன் பல முறை முயற்சித்ததன் பின் Auntie யை தொடர்பு கொண்டு நான் Lift க்குள் சிக்கியிருக்கின்ற விடயத்தை தெரிவித்தேன்.

“ஆண்கள் யாருமே இல்லையே...!” என்று அழுகுரல் கேட்கிறது. “அந்தக்கிழவியை நம்பினால் என் உயிர்போய்விடும்....!” மூச்சும் வாங்கி வாங்கி விட்டது. அண்மையில் இந்தியாவில் உயிரிழந்த இரண்டு வயதுக் குழந்தை சுஜித்தின் மரண வேதனை எப்படி இருந்திருக்கும் என்று உணர்ந்தேன். உடனே என் அலுவலக பிரதானியை தொடர்புகொள்ள முற்பட்டால் Signal இல்லை. Phone Bettery Law அது வேற....! உடனே 119க்கு அழைத்தேன். Line Busyஆக இருந்தது. பல முறை முயற்சியின் பின் 119 ஐ தொடர்பு கொண்டு என் வெள்ளவத்தை முகவரியை கொடுத்தேன். ஐந்து நிமிடத்தில் Wellawatha பொலிஸாரும் வந்துவிட்டனர். அனைவர் முயற்சியிலும் கதவு ஒரு அங்குலம் அளவு திறபட்டது. “தம்பி இப்ப கொஞ்சம் நல்லா மூச்சி எடுத்துக்கொள்ளும்” என்று ஒருவர் கத்தினார். பின் மெல்ல மெல்ல கதவு முழுமையாக திறபட்டதும் வெளியே பாய்ந்த பாய்ச்சல் இருக்கே......ம்ம்ம்....!!!

“எனக்குத்தானா இது நடக்கனும்....! எல்லாம் அவன் நாட்டம்....! ஒவ்வொரு நாளும் புது அனுபவங்கள்..!”

கருத்துகள்