எத்தனையோ நாட்களாக ஊமை உள்ளம் எனும் தலைப்பில் ஆக்கம் எழுதனும் என்றே இருந்தேன். இதோ இந்நொடி இடி இடிக்க மழை தூற ஊமை உள்ளம் உங்களுடன் பேச தொடங்கிவிட்டது. ஆரம்பமே தலைகீழ் என்று எண்ணுகிறீர்களா? ஆக்கத்தின் இறுதியில் வரும் ஆக்கத்தின் ஆரம்பத்திலே வந்து விட்டதா? ஆரம்பம் என்று நினைக்கிறது வாழ்வின் இறுதியிலும், இறுதி என்று நினைக்கிறது வாழ்வின் ஆரம்பத்திலும் வருதில்லையா?
வாழ்க்கையே இப்படி தாங்க அன்று முகம் பார்த்து பேசிய விடயங்கள் எல்லாம் இன்று தனக்குத்தானே மனதுக்குள்ளே பேசிக் கொள்கின்றனர் பலர். சொல்லிய விடயங்களை விட சொல்லாத விடயங்களே ஏராளம். தன் மனதோடு தானே பேசி மன ஆறுதல் அடைபவர் பலர். எத்தனேயோ ஊமை உள்ளங்கள் எம்மத்தியில் வாழ்ந்து கொண்டு தான் உள்ளது. வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஏன்? உங்கள் பக்கத்தில் உள்ளவராக கூட இருக்கலாம்.
"ஊமை உள்ளம்" எனும் தலைப்பில் இனிவரும் காலங்களில் வரப்போகும் என் ஆக்கங்களில்(மக்களின் மன ஏக்கங்கள்) என் பெயர் குறிப்பிடப்படாததால் பல பெயர்கள் என் ஆக்கத்துக்கு சொந்தம் கொண்டாடப்படலாம். பல சமூக வலைத்தளங்களில் edit செய்யப்படலாம். copy பண்ணப்படலாம். (இது தானே சமகால நடப்பு) ஏன் எனக்கே "ஊமை உள்ளம்" என்ற பெயரில் group ஆரம்பிக்கலாம் தானே? இல்லை இது பற்றிய முடிவு இன்னுமில்லை. group- open பண்றது பெரிசில்லங்க, but அந்த group அ கண்ணியம் தவறாகாம கொண்டு செல்லனுமே ஏதோ எம் group இலுள்ள யாராவது ஒருவருடைய number- misuse ஆகும் பட்சத்தில் அதற்கு பொறுப்பு நான் தானே?
"ஊமை உள்ளம்" group இலே ஊமை உள்ளங்கள் உருவாகப்படக்கூடாது. எல்லோரையும் தப்பான கண்ணோட்டத்தில் கூறவில்லை. சமகால உலக நடப்பை சொன்னேன். ஊமை உள்ளம்" group உருவாக்கபட்டால், ஊமை உள்ளங்கள் உங்கள் விடயங்களை தனிப்பட்ட முறையில் என்னிடம் கூறலாம். அது எழுத்து வடிவில் ஆக்கமாக group இல் போடப்படும். video ஆகவும் edit செய்து group இல் போடப்படும். அதற்கு group members தங்கள் கருத்துக்களை பதிவிடுவார்கள். எத்தனையோ ஊமை உள்ளங்கள் இதில் பயனடையலாம். அவர்கள் கருத்துக்களும் மனித மனங்களில் விதைக்கப்படும்.
நீங்கள் யோசிக்கலாம். என்னடா இது group- open பண்ண மாட்டேன் என்று சொல்றாங்க, group-open பண்ணினால் இவ்வாறு இவ்வாறெல்லாம் செய்வேன் என்றும் சொல்றாங்க, confuse ஆ இருக்கே? (உங்க mind voice எனக்கு கேக்குதுப்பா) ஊமை உள்ளம்" group ஆரம்பிக்கனும், அதன் மூலமா ஊமை உள்ளங்கள் மன ஆறுதல் அடையனும் என்றெல்லாம் நிறைய ஆசை கனவு எல்லாம் இருக்கு. அது நிறைவேறுவதும் நிறைவேறாம போவதும் உங்கள் கைகளிலே. (என்ன, என் கையில ஒன்னுமே இல்ல என்று comedy பண்ணி சிரிக்காதீங்கப்பா. உங்களில் இருக்கும் ஊமை உள்ளங்கள் தன் மனதில் பூட்டிவைத்திருக்கும், யாரிடமாவது தன் மனதிலுள்ளதை கூற வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஆறுதல் கிடைக்குமிடமாக இது இருக்கலாமே.?)
உடம்பில் பட்ட காயம் உடனுக்கு வலி இருக்கும். காயம் ஆறும் வரை வலி, வேதனை இருக்கும். ஆனால் காயம் வந்த உடன் இருக்கும் வலி, வேதனை இருக்காது. ஆனால் உள்ளத்தில் ஏற்பட்ட வலி இருக்கே... அப்பப்பாஹ் இப்ப நினைத்தாலும் சாவுற மாதிரி வலி இருக்கு என்று நீங்கள் சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடியும். அதற்காக தானே "ஊமை உள்ளம்" எனும் ஆக்கம். ஊமைகளுக்கு விளங்குவதற்காய் ஊமைப்பாசை(மொழி) உள்ளது.
அப்போ.., ஊமை உள்ளங்கள்...??? உங்கள் உள்ளங்கள் ஊமையாய் மௌனித்து போவதும், உள்ளங்கள் பூந்தோட்டியாய் மாறுவதும், குப்பைத்தொட்டியாய் மாறுவதும் நம் எண்ணங்கள் செயல்களை பொறுத்தே உள்ளது.
குறிப்பு- ஊமை உள்ளம் எம்மால் நாமே எமக்கு ஏற்படுத்திக் கொள்வது. அதை எம்மாலே சீர் செய்யலாம். ஆனால் அங்கவீனம் என்பது இறைவன் படைப்பில் உள்ளது. எனவே யாரும் அங்கவீனமானவர்களை பார்த்து ஏளனமாக கதைக்க வேண்டாம். அவர்களை பரிதாப பார்வையில் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு முடிந்தளவு எம்மால் உதவி செய்வோம். பலம் சேர்ப்போம். "அங்கவீனம் என்பது இயலாமை அல்ல" அவர்கள் எம்மை காட்டிலும் உள்ளத்தால் பலமானவார்கள். வாழும் ஒவ்வொரு நொடியும் மனிதநேயத்துடன் வாழ்ந்து மரணிப்போம்.
உள்ளம் சீராகும் பட்சத்தில் நம் செயல்களும் சீராகும். எண்ணம் தானே வாழ்க்கை., விடை தெரியாத வாழ்க்கையில், விதை வரைந்த வழியில் பயணிக்கிறது நம் வாழ்க்கை.
கருத்துகள்
கருத்துரையிடுக