எதிர் பார்ப்பின் விழித்தோன்றல்கள் பகுதி 19

ஐந்து நிமிடங்கள் தான் தாமதம், ரோசன் ரெடி ஆகி கோட்டும் சூட்டுமாக தன் தாய் சகோதரி முன் காட்சி அளித்தான். ரிங் ரிங்.... என்று ரோசனின் போன் மணி. ஸலாமுடன் நிசாத், ரோசன் பதில் ஸலாத்துடன்,

"சொல்லுங்க மச்சான்."

"ரெடி ஆகிடிங்களா? ஓஹ் மச்சான் இன்னா மஸ்ஜிதுக்கு வர தான்."

"ஆஹ் சரி கொண்டு வர வேண்டிய டொகுமெண்ட்ஸ் எல்லாம் எடுத்துட்டு இருங்க. டென் மினிட்ஸ்சால கார் வரும்."

என்று சொல்லி போனை கட் பண்ணினான்.

"உம்மா கொண்டு போற பதிவு சாமான் எடுத்துடிங்களா,"

"ஓஹ் ரோசன் அந்த பய்ல் இன்னா இருக்கு"

என்று கண் கலங்கினார் சுபைதா.

"என்ன மா இப்போ அழுரிங்க."

"உங்க வாப்பாவ நினைச்சி அழுறன் ரோசன், இந்த பொறுப்ப சுமக்குற வாப்பா இல்ல. ஒரு தகப்பன்ட பொறுப்ப நீ சுமக்காய்"

என்று சுபைதா தன் கணவனை நினைத்து அழுதாள். இவ்வாறு பேசி கொண்டு இருக்கும் போது, நிசாத்தின் கார் ருஷாவின் வாசல் தட்டியது.

"பீப் பீப்...."

"ஆஹ் வாரன் மச்சான்..."

ரோசனும் தாய் சுபைதாவும் வெளிச் சென்று வழி அனுப்பி வைத்தார். வாசல் விட்டு வீட்டுக்குள் கால் அடி வைக்கும் போது மகள் என்ற ஒரு உறவை தன் மருமகன் என்ற ஒரு புது உறவுக்கு ஹலாலாய் உரித்தாக்கிய உணர்வை உணர்ந்தார் சுபைதா.

"உம்மா உம்மா...."

என்று ருஷா அழைக்க, வாசலில் நின்ற சுபைதா அவசரமாக வீட்டுக்குள் சென்று,

"ஓஹ் இன்னா வாரன் ருஷா...

என்ற படி ருஷா முன் நிற்க,

"உம்மா இந்த உடுப்ப தான் போட சொன்ன மதினி அப்போ நான் இதை எடுத்து வைக்கன், தொழுதுட்டு வாரன் நீங்களும் தொழுதுட்டு வாங்க மா."

"ம்ம் சரி ருஷா தொழுதுட்டு கெதியா வாங்க சரியா"

என்று தொழ சென்றார் சுபைதா. இருவரும் தொழுது விட்டு தன் தாயின் கட்டளைக்கு அமைய,

"ருஷா ரெடி ஆகுமா"

"ம்ம்.. சரிம்மா"

என்று தன்னை அவளுக்கு தெரிந்த வகையில் அலங்காரம் செய்து கொண்டாள் மேக்கப் இல்லா அழகி அவள்.

தொடரும்…. K.Fathima Risama Nintavur. SEUSL. வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்