எதிர் பார்ப்பின் விழித்தோன்றல்கள் பகுதி 20

தன் தாய் தனக்காக வாங்கிய ஒரு தங்க தோடு, ஒரு மாலை, இரண்டு கைகளிலும் இரண்டு மோதிரம், ஒரு பூட்டு காப்பு என்பவற்றை தாய் சுபைதாவின் அன்போடு போட்டு கொண்டாள். தங்கத்தை போட்டால் பெண்ணுக்கு ஒரு அழகு. ஆனால் அவள் தங்கத்தை போட்ட தால் தங்கம் அழகாய் தெரிந்தது அவள் தாயின் கண்ணுக்கு, அது என்றால் உண்மைதான் அவ்வளவு அழகாய் இருந்தாள்.

"ருஷா மாஷா அல்லாஹ்"

அவ்வளவு அழகா இருக்காய் மா. அழகிய புன்முறுவல் அழகாய் பூத்து,

"தங்கியுது மா."

என்று தன் தாயை அரவனைத்துக் கொண்டாள். அப்போது அவளின் போனின் அலறல்,

"ரிங் ரிங்..."

"உம்மா மதினி கோள் பண்றாங்க."

"ஹலோ...."

"ஆஹ் ருஷா ரெடி ஆகிடிங்களா."

"ம்ம் ரெடி ஆகிடன்."

"ஆஹ் காவின் எழுதியாச்சு , வீட்ட வந்து தான் கார் வரும். நாங்களும் கூட வரணுமே"

"யாரும் வர மாட்டாக நீங்க எதுவும் அர்ரேன்ச் பண்ண தேவ இல்ல. உம்மாவையும் கூட ரெடி ஆக சொல்லுங்க"

"அப்போ சரிம்மா வைக்கன்"

என்று மூச்சு விட நேரம் இன்றி பேசி முடித்தாள் பாத்திமா. போனை வைத்து விட்டு பேசியவற்றை சொல்லி முடித்தாள் ருஷா.

"பாரு ருஷா நமட நில தெரிஞ்சி அக்கம் பக்கம் கூட சொல்லாம இருக்கம் ஆனா அவகட பெரும் தன்மை பாரு."

என்று தன் வறுமை நிலை நினைத்து வருந்தி கொண்டாள். நேரம் கடந்தது இருவரும் ரெடி ஆகி விட்டு தேநீரையும் அருந்தி விட்டு காரின் வருகைக்கு காத்துக் கொண்டு இருந்தார்கள். தாமதம் இன்றி கார் அதனுள் சாரா, பாத்திமா, மாத்திரம் தான். ஸலாம் சொல்லி உள்ளே நுழைய, கொஞ்சம் இருந்து போகலாம் என்று எல்லாம் சரி செய்து கொண்டார்கள்.

"ருஷா உடுப்பு எல்லாம் எடுத்த தானே நீங்க."

"ஆமா மதினி"

"ருஷா இப்போ போய் நீங்க இருந்தா சரி கல்யாணம் முடிந்து ஆனா பின்னரம் அசர் தொழுதுட்டு பங்சென் அதுல உங்கட மஹர நிசாத் தருவார். எங்கட பேமிலி வரும். அப்படித்தான் சரியாமா இது எங்கட வழக்கம்."

என்று சாரா சொல்ல,

"ம்ம் சரி அண்டி"

என்று பதில் சொன்னாள்.

பாத்திமா எழும்பி ருஷாவின் உடுப்பு பேக்கை எடுத்து காருக்குள் வைத்தாள். தாய் சுபைதாவும் தன்னுடையதும் ரோசனுடையதும் கல்யாணதுக்கு போட வேண்டிய உடுப்பை எடுத்து கதைவை பூட்டி எல்லோரும் அமர கார் நிசாத்தின் வீட்டை நோக்கி புறப்பட்டது. சுபைதா சாராவிடம்,

"மூத்த மகனும் மருமகளும் வார என்று சொன்ன தானே வந்துடாங்களா?"

"இல்ல புள்ள வார என்று தான் சொன்ன ஆனா வர கூடிய நில இல்ல, அங்க ஆஃபீஸ்ல முக்கியமான வேலையாம் அதால வரல."

"ஆஹ் எல்லாம் அல்லாஹ்ட நாட்டம்."

"என்ன எங்க வீட்டு மருமகள் பேசாம வார புகுந்த வீடு இன்னும் கொஞ்சம் நேரம் தான் வந்துடும்"

என்று பாத்திமா கிட்ட, ருஷா சிரிக்க, கதை நீண்டது. வீடும் வந்து சேர்ந்தது. சாராவும் பாத்திமாவும் இறங்கி ருஷாவை வரவேற்க, திருமணத்திற்காக வந்த நிசாதின் குடும்பம் எல்லாம் மகிழ்வோடு வரவேற்றார்கள். மச்சி மாமி மருமக்கள் ராத்தா சின்ன சின்ன குட்டிகள் என்று வீடே ரணகலமாய் இருந்தது. தனி வீட்டில் தாய் தம்பி என்று வாழ்ந்த ருஷாக்கு அல்லாஹ் கொடுத்த அருள் என நினைத்தாள். சுபைதா இவ்வளவு அழகான அன்பான குடும்பம் தன் மகளுக்கு கிடைத்ததை எண்ணி இறைவனை நினைவு கூர்ந்தாள். எல்லாரும் பொண்ணு அண்டிய அவங்கட ரூமுக்கு கூடிடு போங்க என்று பாத்திமா சொல்ல அணை தாண்டிய வெள்ளம் போல அனைவரும் ருஷாவை மொய்த்து கொண்டு மேல் மாடிக்கு கூட்டி சென்றார்கள். ஒரு பக்கம் சாப்பாட்டு வேலை ஒரு பக்கம் திருமண கூடாரம் ஒரு பக்கம் குழந்தைகள் கொண்டாட்டம் என்று அலை மோதியது.

குடும்பத்தில் குமரிகள் விளையாட்டு ருஷாவோடு, மருதாணி போட என்று பாத்திமாவின் மதினி அழைக்க பட அவர்களின் அழைப்பை நோக்கி அனைவரும் காத்து கொண்டு இருக்க, அவள் பொண்ணை சோடிக்கும் அந்த ஊரின் பெரிய பியூட்டி பார்லர் வைத்திருக்கும் பீயூட்டீசியன். ருஷா என்று டீ உடனும் காலை உணவுடனும் பாத்திமா வந்து கொடுத்து விட்டு போக அதை அவள் சாப்பிட்டாள்.

இவ்வாறு நேரம் கடந்து செல்ல, தன் மனைவியை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நிசாத்தை வாட்டியது. தனக்கு மனைவி தான் ஆனாலும் மஹர் அவள் கைக்கு செல்லாமல் அவளை பார்க்க செல்வது சரி இல்லை என்று தனக்குள் ஒரு முரண்பாடு ஆனாலும் அவளை பார்க்க வேண்டும் என்ற அலை மோதிய எண்ணம்.

அஸ்ஸலாமு அலைக்கும்....

தொடரும்…. K.Fathima Risama Nintavur. SEUSL. வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்