எதிர் பார்ப்பின் விழித்தோன்றல்கள் பகுதி 23

அந்நிய ஆண்கள் யாரும் வீட்டுக்குள் இல்லை, பெண்கள் மாத்திரம் குழுமி அவளை நோக்கியவாரும், இரண்டு லேடி போட்டோகிராபர்கள் அவளை விடியோ எடுத்தும் போட்டோ எடுத்தும் கொண்டு இருந்ததை பார்த்து திகைத்து நடந்து வந்தாள்.

சோபாவில் அவளை அமர செய்ய அரைமணி நேரம் கழித்து நிசாத்தை ரோசன் அழைத்து வர அவர்களோடு பாத்திமாவின் கணவரும் பாத்திமாவும் றுக்சியும் ஒரு வயதான மௌலவியும் வர மஹர் கொடுத்து வலியாக ரோசன் இருந்து திருமணம் நடைபெற்றது. மாஷா அல்லாஹ் தன் கணவனை நினைத்து மனதால் சந்தோச பட்டாள். தான் கேட்ட மஹருக்கு நிகராக அதன் பெறுமதியை ஒட்டி அவளுக்கு முப்பது பவுனில் நகையை மஹராக கொடுத்து இருந்தான். கணவனின் தகுதியை அறிந்து மஹர் கேட்க வேண்டும் என்றாலும் அவன் அந்த தகுதியில் தான் இருந்து இருந்தான்.

அதன் பிறகு மாப்பிள்ளையை அழைத்து கொண்டு ரோசன் வெளியில் ஆண்களின் பக்கம் அழைத்து செல்ல திருமணக் கூட்டம் மெது மெதுவாக கலைய குடும்பத்தவர்கள் மாத்திரம் இருந்தார்கள். மாப்பிள்ளை தோழர்கள் மாப்பிள்ளையுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்து... நிசாத்,

"அப்போ நாங்க போய் வாரம் இன்ஷா அல்லாஹ் வலிமாவுல மீட் பண்ணுவம் டா மச்சான்"

என்று நண்பர்கள் சொல்லி விடை பெற்றார்கள்.

"ஆஹ் ஓகே இன்ஷாஅல்லாஹ்..."

என்று நிசாத் சொல்லி விட்டு உள்ளே வர குடும்பத்தவர்கள் மாத்திரம் போட்டோக்கள் எடுத்து கொண்டார்கள். இவ்வாறு திருமணம் சந்தோசத்தோடு நடை பெற்று முடிந்து, மூன்றாவது நாளில் வலிமாவும் நடைபெற்று ருஷா தன் புது வாழ்வில் தனக்காய் இனி கணவன் என்ற நம்பிக்கையில் தன் வாழ்வை கழித்து கொண்டு இருந்தார்கள்.

****************************

நாட்களும் திருமண சந்தோசதோம் மறையாமல் இரண்டு மாதங்கள் கடந்தது. நிசாத்தின் வீட்டிலே ருஷாவின் தாயும் ரோசனும் இருந்தாலும் அவ்வெப்போது தங்கள் சேரியையும் நாடினர். பாத்திமாவும் கணவரும் இடைக்கிடை வந்து போக வீடும் சந்தோச கடலில் மிதந்தது. நிசாத்தும் அவனின் வேலையில் வெற்றியைக் காட்டிக் கொண்டு இருந்தான். தூசி விழுந்தாலும் கண் கலங்க விடாது அன்பாய் அரவனைத்து கொண்டு மலரான ருஷாவை பனித்துளியாய் தாங்கினான். இறைவனின் வழியில் தன் வாழ்வை தன் மனைவி ருஷாவுடன் பயணித்து கொண்டு இருந்தான். தஹஜத்தில் ருஷாவின் குரலுடன் எழும்பி, தொழுகைகளும் இடைக்கிடை அவர்கள் இருவரும் ஜமாஅத்தாகவே சென்றது. சிறு சுற்றுலா கிழமைக்கு ஒரு தடவை தனிமையில் கணவன் மனைவி புரிந்துணவர்வுகள் என்று வாழ்கை நீண்டு கொண்டு போனது, விட்டு கொடுப்பு, அன்பு , இரக்கம், செல்ல கோபம் என்று கணவனுக்கு ஒரு குழந்தை மனைவியாய் இருந்தாள். அப்போது அவளுக்கு ஒரு குழந்தை கிடைக்க இருப்பதை அறியதவளாய் இன்னும் இந்த சந்தோச குடும்பத்தில் வாழும் ஏஞ்சலுக்கு இறைவனின் சோதனையும் காத்து கொண்டு இருந்தது.

ருஷா நான் ஆஃபீஸ் போய் வாரன் டா, என்று தன் மனைவியின் பிறை நெற்றியில் தன் இரக்க முத்தம் பதித்து ஸலாத்துடன் விடை பெற்றான்.

"ஆஹ் சரிங்க பீ அமானில்லாஹ்"

என்று தன் வழமையான வாசகத்துடன் வழி அனுப்பி வைத்தாள். நிசாத் சென்று ஒரு மணி நேரம் தாண்டியது, ரிங் ரிங்.. ருஷாவின் போன் அலறல்.

தொடரும்…. K.Fathima Risama Nintavur. SEUSL. வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்