எனக்காக யார்??

உலகம் மயையானதே-அதில் உறவுகள் தேவையானதே... உதிரம் ஒன்றாகி உருவானதே இரத்த உறவாம்...

உயிர்துடிக்கயில் ஊர் ஏறெடுத்தும் பார்பதுமில்லை உறவாகியவர்கள் உறவாட நினைப்பதுமில்லை...

தெரியாதவன் தோல்கொடுப்பான் நாம் உயர தெரிந்தவன் கோல் கொடுப்பான் மாற்றானிடம் -நாம் மடிய...

தொட்டில் உறவுகள் இங்கே தொடர்பாடல் வசதியிருந்தும் தொடர்பின்றி போகிறது தரம் வேறாய் பிரிகிறது...

ஊமையானது உதடுகளல்ல உண்மையில் - நம் உள்ளங்கள் தான்...

சொத்திருந்தால் சொந்தக்காரனாம் செல்வத்தை செலவு செய்ய யாரும் பங்காளிதான்...

சோகம் கூடவே இருக்கையில்-ஆயிரம் சோலிகள் சொல்லி முடிப்பர்...

துண்டிப்பு உறவுகளிடையே தண்டிப்பு உணர்வுகளிடையயே...

ASANA AKBAR ANURADHAPURA SEU OF SRILANKA

கருத்துகள்