எம்.எச்.எம் அஷ்ரபின் கனவுகளை நனவாக்க வேண்டிய தென் கிழக்குப் பல்கலைக்கழகம் - நூல் வெளியீட்டு விழா

ஸஹீம் கமால் (இர்பானி,BA) அவர்களின் "எம்.எச்.எம் அஷ்ரபின் கனவுகளை நனவாக்க வேண்டிய தென் கிழக்குப் பல்கலைக்கழகம்" எனும் நூல் வெளியீட்டு விழா இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீட கேட்போர் கூடத்தில் நேற்று (2019/11/28) மிகவும் சிறப்பாக நடைபெற்றது .

இந் நிகழ்ச்சிக்கு பிரதம அதீதியாக இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் MMM. நாஜிம் அவர்கள் கலந்துக் கொண்டார்.

மேலும் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீட பீடாதிபதி SMM. மஸாஹிர் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு கொளரவ விருந்தினராக இஸ்லாமிய கற்கைகள் துறை தலைவர் கலாநிதி MIM.ஜஸீல் அவர்களும், அரபு மொழி துறை தலைவர் கலாநிதி AR. நஸார் அவர்களும், சிரேஷ்ட விரிவுரையாளர் FHA . ஷிப்லி அவர்களும், கலை மற்றும் கலாச்சார பீட பீடாதிபதி கலாநிதி ரமீஸ் அபூபக்கர் அவர்களும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்ச்சியை இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஆய்வு மன்றம் ஏற்பாடு செய்துயிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

NAFEES NALEER (IRFANI) South Eastern university of sri lanka
 

கருத்துகள்