ஓய்வுபெறுகிறார் பேராசிரியர் எம். எஸ். எம். ஜலால்டீன் சேர்

ஏறத்தாழ 38 வருடங்கள் கல்விப் பணியாற்றியதோடு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 01.01.1996 இல் இணைந்து கடந்த 30.09.2019 அன்றுடன் ஓய்வு பெற்றுச் சென்ற இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீட ஸ்தாபக பீடாதிபதியும், இலங்கையில் அரபு மொழியின் முதலாவதும், ஒரே ஒரு பேராசிரியருமான ஓய்வு பெற்ற பேராசிரியர் எம். எஸ். எம். ஜலால்டீன் அவர்களுக்கான பிரியாவிடை வைபவம் இன்றைய தினம் (06.11.2019) எமது பீடத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம். எம். எம். நாஜிம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததோடு, பீடாதிபதி கலாநிதி எஸ். எம். எம். மசாஹிர் தலைமை தாங்கியிருந்தார்.

இந்நிகழ்வை தொகுத்து வழங்கும் பெரும்பாக்கியம் கிடைத்தமையை பேறாகக் கருதுகிறேன். ஓய்வு பெற்றுச் செல்லும் பேராசியரின் ஓய்வுகாலம் சிறப்பாக அமையவும், நீண்ட ஆயுளோடு அவர் வாழ்வாங்கு வாழவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

[smartslider3 slider=16]

கருத்துகள்