உங்கள் கண்கள் என்ன கருணையின் பிறப்பிடமா! காதலின் நுழைவாயிலா! காமத்தின் ஆழ்துளையா! காவலின் புதைகுழியா!
கல்வியின் ஒளியினால் தானோ கண்களும் பிரகாசிக்கின்றன! கண்கள் என்றாலே வெறும் கருப்பு வெள்ளை மட்டுமா? இல்லை......
பூனையின் நிற கண்களும் சில நீல நிறக் கண்களும் கண்களில்.....
பார்வை இருந்தால் தானே சிறப்பு நல்லதைப் பார்த்தால் தானே விருப்பு நல்லதைப் படித்தால் தானே உவப்பு நல்லதை உணர்ந்தால் தானே மகிழ்வு அசிங்கம் கண்டாலோ வெறுப்பு
காற்றின் வேகத்தை விட கண்களின் வேகம் அதிகம் காற்றைக் கிழித்து கவலையைத் துரத்தி விழித்திரையில் விம்பமாய் விழுகிறது! அதனால் தானோ கண்களை வின்மீன் என்றும் கயல்விழி என்றும் சொல்கிறோம்!
சிரிக்கும் போதும் முறைக்கும் போதும் கண்களின் பங்கேற்பு பன்மடங்கு கால்களுக்கும் கரங்களுக்கும் போட்டிகள் கண்களுக்கு ஏது தனியே போட்டிகள்! கண்களுக்கும் பங்குண்டு பேட்டிகளில் கண்களைக் கண்களால் கைது செய்தால் உலகம் என்னாவது......
பிறக்கும் போது வரும் கண்கள் பல தடைகள் ஏற்பட இடை நடுவே பறிக்கப்படும் பரிதாபம்! சில பொழுதுகளில் கோபதாபங்களிலும் விஞ்ஞான விஸ்தீரனத்தின் ஆனந்தத்தில் அழியும் அவலம்!
இரண்டும் ஒன்றாய்ப் பார்க்கும் கண்கள் சில சமயங்களில் ஒன்றை மூடி மற்றயதன் சைக்கினைப் பரிமாற்றம்! கண் இமைக்கும் பொழுதில் மரணமும் தழுவும்! இதனை யார் தான் வெல்ல!
காகங்களுக்கும் இரண்டு கண்கள் இரண்டும் வெவ்வேறு திசைகளில்... மனிதனுக்கோ இரண்டு கண்கள் ஒரே திசையில்....... நன்கு ஆய்ந்து ஓய்ந்து ஆராய்ந்து நல்ல முடிவுகள் பெற்றிட நல்ல கருத்துக்கள் மணம் பரப்ப! முகம் பார்த்து முரண்பாடு தீர்க்க!!
வலியின் ரேகைகளை விழியில் நீராய் ஓட்டும் கண்கள்! ஆனந்தத்தை நீராய்ப் பாய்ச்சி மகிழ்வைக் காட்டும் அதே கண்கள்!
கண்கள் இருக்கும் போதே நல்ல எழுத்துக்கள் படிப்போம்! கவலைகள் மறப்போம்! கல்விக் கொடி ஏற்றி வித்தைகள் பல கற்று தத்துவங்கள் பல உரைப்போம்!!
கருத்துகள்
கருத்துரையிடுக