இருள் மாத்திரம் எஞ்சியிருக்கும் உலகமிதில் எல்லோர் முகமும் கேள்விச் சின்னமாகவே வெறித்துக் கொண்டிருக்கிறது
உங்கள் துருவிப் பார்க்கும் கண்களுக்கு ஓய்வளியுங்கள் அப்போதாவது நீதி தேவதையின் கண்கள் திறக்கப்படட்டும்
பணத்தினளவு பார்த்தே உரத்துப் பாடும் சட்டம் அதும் முதலாளி என்றதும் வாலைச் சுருட்டி வணக்கம் சொல்லுகிறது
தலையிருப்பவர்கள் எல்லாம் சிந்திப்பதால் ஏகாதிபத்திய எகத்தாளச் சிரிப்புகள் சிந்தனைக்கும் வாய்ப்பூட்டு இடுகின்றன
காலக்கறையான் இவற்றையெல்லாம் தின்று தீர்க்காதோ?
முதலாளித்துவ அமைப்பின் அப்பட்டமான தோல்விகளை அடைத்துவிட்ட காதுகளின் செவிப்பறையில் ஏறுவதற்கு பறையடித்துச் சொல்ல வேண்டுமல்லவா?
கருத்துகள்
கருத்துரையிடுக