நெஞ்சுரம்

வாழ்க்கைத் தேடல்களில் வாழ்வாங்கு வாழ்வதற்கு!! நண்பா தேவை நெஞ்சுரம்

சுபஹ் தொழுதுவிட்டு இறைமறை ஓதி இன்பம் காண நண்பா தேவை நெஞ்சுரம்

கஷ்டங்கள் வரும் போது துன்பங்கள் தொடரும் போது !! பொறுமை காக்க நண்பா தேவை நெஞ்சுரம்

தாய் தந்தையை மதித்து வாழ !! சகோதர வாஞ்சையோடு வாழ நண்பா தேவை நெஞ்சுரம்

அயலவர் அக்கம் பக்கம் நல்லுறவு நிலைத்திட வாழ்வாங்கு வாழ்ந்திட நண்பா தேவை நெஞ்சுரம்

சாதனைகள் செய்ய சரித்திரத்தில் இடம்பிடிக்க !! மரணத்தின் பின் பெயர் நிலைக்க நண்பா தேவை நெஞ்சுரம்

ஒலுவில் அபூ நுஷ்தி அஹமட்

கருத்துகள்