பேருந்தில் கண்ட பேரழகி

சாலைகள் வழியே - ஒரு சோலைவனம் கண்டேன் சேலை உடுத்திய மலர்கள் சேர்ந்து ரசிக்கத் தோனும்..

பசுமை பாயில் புரண்டு படுக்கத்தோனும் பார்க்கும் போதெல்லாம் பரவசம் தானும்

எட்டுத்திக்கும் வானம் எங்கும் திரியும் மேகம் எட்டிப்பிடிக்க தோனும் நிலவு எண்ணிலடங்கா உடுக்கள்

பகள் சுந்தரி அவள் தான் சூரியன் பாரை பவனி வருவாள் பாருங்கள்

வாழ வழி செய்யும் வளியும் - அதை தினம் வாங்கிட முடியாது வையகத்தில் அறியும்

அசைந்தாடும் மரம், செடி, கொடிகள் அதற்கு இசைந்தோடும் பல நதிகள் அடுக்கி வைத்த மலைகள் மலையின் மகளாக பாயும் நீர் நிலைகள்

காட்டுராஜாவின் வனமும் நம் நாட்டு ரோஜவின் மணமும் காலத்துக்கு விருந்தாகும் - நம் மன காயத்துக்கு மருந்தாகும்

துணையில்லா கவலையை துணை நின்றவள் தூரமாக்குவாள் நான் யாரென்று தெரிந்திருக்கும் என் பெயர் அது தான் புரிந்திருக்கும்

கன்னி பெயர் தான் இயற்கை என்னை காப்பாற்ற யார் தருவார் தன் கை

ASANA AKBAR Anuradhapura SEU Of Srilanka

கருத்துகள்