மனிதனும் கற்றுக் கொண்டது உங்களிடமோ!

தேசம் விட்டு தேசம் செல்லும் பாசப் பறவைகளே நீங்கள் நேசம் காட்டிச் செல்வீரோ உங்கள் நோக்கம் முடிய எல்லாம் முடிந்திடுமோ

குளிர்கால குளிரை கோடை கால உஷ்ணத்தை மாரி காலப் பணியை தடம் புரலாமல் இடம் பெயர்ந்து வாழ்வியல் தத்துவங்களை வாழ்ந்து அனுபவிக்கும் வாயில்லா ஜீவன்கள்!

இடம் பெயரும் மனிதர்கள் தடம் புரலாமல் தன் நோக்கங்கள் நிறைவேற இயங்கும் புனிதர்கள்

கண்டம் விட்டு கண்டம் மாகாணம் விட்டு மாகாணம் மாவட்டம் விட்டு மாவட்டம் இரவோடு இரவாக இலவுகள் இன்றி உறக்கத்தோடு உறக்கம் களைப்பாறி பகல்களோடு பகலாக பகலுணவும் புசிக்காமல் ருசிக்காமல் உறவுகளோடு உறவாட தன் நோக்கம் நிறைவேற இடம் பெயரும் மனிதர்கள்!

நட்புப் பூக்களை நகைகளாய் அணிந்து நல் மணம் பரப்பும் நல்லுள்ளங்கள்!

எழில் கொஞ்சும் பாசப் பறவைகளே மனிதனும் இடம் பெயரக் கற்றுக் கொண்டது உங்களிடம் தானோ?

எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா SLPS-2 பஸ்யால

கருத்துகள்