மொழியில் ஒரு இடைவெளி

காசு கொடுத்து வாங்க முடியாது கண்டவர் நின்டவர் பேச முடியாது காவியம் இதுவரை எழுதப்படவில்லை காலம் வரையும் ஓர் அழகிய மொழி

இதழ்கள் குவிந்து திறந்து அகழும் இதிலுள்ளதே இனிமை - யாரும் இன்னும் அறியவில்லை அதன் மகிமை

பேசுவது கேட்டால் பேரின்பம் போகும் நெடுந்தூரம் பெரும்துன்பம்

அடுக்கு மொழிகள் பல அனைவர் அறியா அமிர்த வரிகள் சில அகிலமே வாய் திறக்கும் அகராதியில் இல்லாத ஒரு மொழி

முத்துச் சிரிபோடு முதல் வார்த்தை - ஏதோ முனகல் மொழியில் மறு வார்த்தை

களப்படமில்லாத மொழி - அதன் கவர்ச்சிக்கு எல்லோரும் பழி கன்னதாசனும் பேசினார் காந்தி அடிகளும் அலசினார்...

தூய அம்மொழி தான் தூரலான மழலைமொழி...

ASANA AKBAR Anuradhapura SEU Of Srilanka

கருத்துகள்