ஜனநாயக நாடு ஒன்று -அதிலே ஜனாதிபதி தேர்தல் என்று வரலாறு காணாத சரித்திரம் வரையறையில்லாத போட்டி! குடியுரிமை பற்றியும் பேட்டி!
முப்பத்தி ஐந்து போட்டியாளர்கள் இருபத்தி ஆறு அங்குலப்பட்டியல் நீண்டு செல்லும் பட்டியல் படித்திடத்தானோ மேலதிக ஒரு மணித்தியாலம்!
பொது இடம் நாகரீக பண்பாடு புகைப் பிடித்தல் ஆகாது புகைப் படங்கள் எடுத்தல் கூடாது! மீறி எடுத்தாலோ நீங்கள் விருந்தினர் பொலீஸ் நிலையத்தில் பகலுணவு நீதிமன்றில் இரவுணவு தேர்தல் ஆணையாளர் உறுதியாக இறுதியாக சுவாரஸ்யமாக சீரியஸ்ஸாக சொல்லி விட்டார் தன் கடமைப்பாட்டை!
திக் திக் மணித்தியாலங்கள் நிமிடங்களாக தேய்கிறது! புதிய ஆட்சி பிறக்கப் போகிறது! அனைவரும் ஆவலோடு காத்திருப்பு!
அன்னமா மொட்டா மணியா என நாங்கள் வாக்காளர்கள் வேண்டுவதெல்லாம் அதி குறைந்த சேதம் அதி கூடிய தேச பாதுகாப்பு!
வேதனைகள் களையும் விடியல் தேடி பிரார்த்தனைகள்!!
எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா SLPS -2 பஸ்யால
கருத்துகள்
கருத்துரையிடுக