அந்திமகள்

கதிரவன் பிரிவிற்காய் காலை மலர் கண்ணீர் சிந்தும் வேளை

சோலை மலர்க் குழுக்களாய் குமரிப் பெண்கள் குடமெடுத்துச் செல்லும் மாலை

பாடுகின்ற பறவைக்கூட்டம் கூடுநோக்கி விரைந்திடும் மகிழ்வான வேளை

பாராட்டும் பாவலரும் பாவொன்றைப் பாடிவிடும் மதிமயங்கும் மாலை

பொன்னைப் போர்த்திய அந்தி மகளும் அடிவானக் கட்டிலுக்கு அமைதியாகச் சென்றாள்.

நிலாக்கவி நதீரா முபீன், புத்தளம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
 

கருத்துகள்