மருச்சியுற்ற இரவுகளில் வெருட்சியுற்ற விழிகள் நெஞ்சதிரும் வெடிப்பொலியில் துஞ்சிமடிந்த உயிர்கள்
குண்டுகளால் முண்டங்கள் சரிய நொடிக்குள்ளே நூற்றுக்கணக்கான உடல்களும் குதறப்பட்டு கடுகளவாய் சிதறிக்கிடக்க
வதையிலும் வலியிலும் சிதைந்த சதைகள் வெந்து அவிந்து பொசுங்கியே போனது
தீப்பசிக்கு உணவான உடலின் அவயங்களும் நாறும் பிணங்களை வாரும் முள்ளிடுக்கிகளும்
பாலினைச் சுரக்காத பிணத்தின் முலைகளை மலப்பீழை கண்ணில் வழிய பற்றியழும் பிஞ்சிகளும்
நினைவுகளின் ஆக்கிரமிப்பில் துன்பங்கள் துருப்பிடித்தாலும் ஆன்மாக்களின் சாந்தி வேண்டி அனைவருமாய் பிரார்த்திப்போம்.
நிலாக்கவி நதீரா, புளிச்சாக்குளம், யாழ்ப்பாணப் பல்கலை கழகம்.
கருத்துகள்
கருத்துரையிடுக