எதிர்காலம் என்னவென்று எண்ணுவதற்கு எத்தனிக்கையில் எண்ணத்தில் எத்தனையோ எதிர்ப்புகள் எழுகிறது
விஸ்தரிப்பெனும் பெயரில் வெட்டப்பட்ட மரங்களால் பாதைகளும் பாலைவனமாகி கட்டட விருட்சங்கள் வியாபித்து நிலைத்திட விளைநிலங்களும் வீணாகிவிடும்
பொல்லாத ஓசோனால் வருங்கால நுரையீரல் நிரம்பி வழிந்திட உணவையே வில்லைகளாக்கி விழுங்கிடவேண்டி வரும்
வண்டல் குவியும் வளமுறு நெய்தலும் வஞ்சகன் சூழ்ச்சியால் வாரி அழிக்கப்படும்
கள்ளத்தனங்கள் மெல்ல வந்துசேர பூத்துக் கிடந்த முகங்களும் காய்ந்து போகும்
குண்டு மழையும் கொடூரமாய்ப் பொழிய விலையில்லா வாழ்வும் நிர்க்கதியுற்று வாடும்
கருத்துகள்
கருத்துரையிடுக