குழந்தைக்கலி தீர்க்க வந்த பால் மணக்கும் குஞ்சரமே தரையில் தவழும் தங்கப்படகாய் தரணி கண்ட சத்தியமே
சீராட்டிப் பாராட்டி நானும் நிலாக்காட்டி சோறூட்டி மைதீட்டி முடிக்கையிலே வண்ண முழி முழிச்சிடுவாய்
கொஞ்சும் போது நீயும் சிரிக்கையிலே முந்திச் சிந்தும் சாரல் மழை முத்துக்களை உதிர்த்திடுமே பித்தாகி மனம் லயித்திடுமே
பத்து வர்ணப் பட்டெடுத்து சித்திரத் தொட்டில் கட்டி தாலாட்டி நீ உறங்க சிந்தையதும் மகிழ்ந்திடுமே
நெஞ்சினை நெகிழ்க்கும் முத்தங்கள் தந்தே பிஞ்சு மொழியால் தஞ்சம் கொள்ளச் செய்திடுவாய்
வெள்ளிச் சிறுசலங்கையோடு நடந்து வரும் தடம் பார்த்து அள்ளிக் கொள்ளத் தோன்றிடுமே கொள்ளைப் பெருமிதங்கள் சொரிந்திடுமே உன்னால் கொள்ளைப் பெருமிதங்கள் சொரிந்திடுமே.
நிலாக்கவி நதீரா முபீன் புளிச்சாக்குளம் புத்தளம்
கருத்துகள்
கருத்துரையிடுக