கூறுவது குற்றமல்ல கூறியது முறையுமல்ல

தவறை செய்திட யாரும் ஆசை கொல்வதில்லை. அவை காலத்தின் சதியாலோ உணர்வுகளின் விளைவாலோ இடம்பெறுகின்றன. உலகில் எவரும் தவறு செய்யாத உத்தமர் கிடையாது. மனிதன் தெரிந்தோ தெரியாமலோ பிழையின்பால் சரிந்து விடுகின்றான்.

குற்றவாளி தண்டனை அனுபவிக்கவும் செய்கிறான். சில சமயம் தான் செய்த தவறை எண்ணி நொந்து கொள்கிறான். உறக்கம் கெடுகிறான், அழுது புலம்புகிறான். தவறை உணர்ந்து கொள்ளாமலே வாழ்ந்து மடிபவரும் உண்டு.

ஒருவர் ஒரு தவறு செய்கையில் அதை சுட்டுக் காட்ட என்று ஒரு முறை இருக்கிறது. தனிப்பட்ட முறையில் முதலில் அணுகிக் கூறலாம். அடித்து கூற முன்பு அமைதியாய் அழகாய் எடுத்துக் கூறலாம். முக்காடு போட்டுக்கொண்டு முதுகுக்குப் பின்னால் கதைப்பதும் முறையல்ல. கூட்டத்தில் குழுமிய குத்தல்கதையும் சரியல்ல.

முறைத்துப் பார்ப்பதால் தவறுகள் சித்தரிக்கப்படப்போவதில்லை. அமைதி காப்பதால் அனைத்தும் சீராய் அமைந்திடுவதுமில்லை. எவராயினும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முன்பு சற்று நிதானமாக சிந்திக்க வேண்டும். வசை இசையாகிப்போய் வாய்க்கு வந்தபடி பேசுவதிலும் அர்தமில்லை.

குறை தேட முன் கண்முன் உள்ள திறை அகற்று சிறை பிடிக்க முன் சினேகிதனாய் கொஞ்சம் மாறு கறை பிடித்திருக்குதென்றால் கறை அகற்ற முன் காரணத்தை நீ தேடு

Asana Akbar Anuradhapura SEU Of Srilanka

கருத்துகள்