சிலேடையான சல்-லடைகள்

உயரத்தை தாண்டினால் பாய்ச்சல் கடலில் ஓடினால் நீச்சல் அக்கரையிலும் இக்கரையிலும் மேய்ச்சல் தினம் பலர் வாயில் அலைமோதுவது எரிச்சல்

விடிந்ததும் வீதியோரம்  தினம் இரைச்சல் தத்தம் வேலைக்காய் தினம் அலைச்சல் எதற்கும் முதலில் வேண்டும் துணிச்சல்

மழையில் நனைந்தால் காய்ச்சல் ஒவ்வாமையில் வரும் சொரிச்சல் ஒட்டுமொத்தத்தில் மனிதனுக்கு மன- உளைச்சல்

நம்புவர் சிலர் குறிச்சொல் நடைபெறுவதெல்லாம் குறைச்சல் பின்னர் தெரியும் அது வெறும் மொழிச்சல்

தூற்றுவார் கொண்டு பழிச்சொல் துரத்துவார் நின்று வன்ச்சொல்

துயரத்தை சொல்லிச் செல் சொன்னதை தூரத்தில் விட்டு நில் வேண்டியதை எடுத்துக் கொள் வெறுத்ததை ஒதுக்கித் தல்

Asana Akbar Anuradhapura SEU Of Srilanka

கருத்துகள்