முஸ்லிம் கிராமங்களுக்கு ஓர் ஆலோசனை
அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், சிவில் அமைப்புக்கள் உட்பட தனி நபர்கள் ஒன்றிணைந்து திட்டமிட்ட அடிப்படையில் வெற்றுச் சுவர்களை மெருகூட்டி அதில் வரையத் தொடங்கியிருக்கும் நிலையில், முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் பிரதேசங்களில் நிறைய வெற்றுச்சுவர்கள்/மதில்கள் காணப்படுவதை ஞாபகமூட்ட விரும்புகிறேன்.
இவற்றை பயன்படுத்த அவ்வப்பகுதி பௌத்த பீடங்கள், பாதுகாப்புத்துறை, அரசியல்வாதிகள், பிரதேச காரியங்களை பிரதிநிதிப் படுத்துவோர் திட்டமிட வாய்ப்புகள் உள்ளது.
எனவே எமது பிரதேசங்களில் ஊர் பொறுப்புதாரிகள் காலதாமதமின்றி தாமே முன்வந்து இதற்கான முன்னெடுப்புகளை செய்வது பொருத்தம் என எண்ணுகிறேன்.
இல்லாவிட்டால் பேரினத்தவரின் அஜண்டாவுக்கு விரும்பியோ விரும்பாமலோ உடன்பட வேண்டிய நிலை ஏற்படலாம். அவர்களின் முடிவை எதிர்த்து பேச எமக்கு தர்மசங்கடமான நிலை உருவாகலாம்.
நாமே எமது பகுதி சுவர்களில் படங்கள் வரையலாமே.
- போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு சம்பந்தப்பட்ட படங்கள்.
- டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு படங்கள்.
- விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் படங்கள்.
- நல்லொழுக்க விழிப்புணர்வு படங்கள்.
- ஆரோக்கிய வாழ்வுக்கு அவஷ்யமான உணவு, உடற்பயிற்சிப் படங்கள்.
குர்ஆனிய வசனங்கள், நபிமொழிகள், மனித நேயத்தை வழியுறுத்தும் சிங்கள மொழிபெயர்ப்புகளை தாராளமாக எழுதலாம்.
இப்படியான யாரும் எதிர்க்கமுடியாத செய்திகளை எமது சுவர்களில் வரைய நாமே முன்னேற்பாடுகளை முன்கூட்டியே ஒழுங்கமைத்துக் கொண்டால் நிறைய மன சங்கடங்களில் இருந்து விடுபடலாம்.
ஒருதலைப்பட்சமாக குறித்த சமூகத்தின் இருப்பை மாத்திரம் பிரதிபலிக்கும் வரைபடங்களை நாம் எமது சுவர்களில் வரையவிட்டு விட்டு அங்கலாய்ப்பதில் அர்த்தமில்லை. பொறுப்புதாரிகள் சிந்திப்பார்களா?
கருத்துகள்
கருத்துரையிடுக