தந்தை

தந்தை ஆண் என்றாலும் உனை வளர்க்கையில் அவரும் ஓர் அன்னையே

சிறு வயதிலிருந்நது உனை கஷ்டங்கள் அறியாது வளர்த்தால் என்னவோ முதுமையிலும் அவர் கஷ்டங்களை நீ அறியமால் போய்விட்டாய்

நீ விழுந்திடும் போதெல்லாம் உனை தூக்கி விட்ட கரம் இன்று வீதியில் தன் வயிற்றுப்பசி தீர்க்க ஏந்தி நிற்க்கிறது

வலிகள் நிறைந்த அவரது வாழ்க்கை புத்தகத்தில் எப்போதும் உனக்காக அன்பின் பக்கங்களை மட்டும் எழுதி வைத்தவர்

இன்று வரை அவரது தேகம் உழைத்துக்கொண்டுதான் இருக்கிறது ஆனாலும் திருப்தியாக அதில் ஒரு வேளை கூட அவர் பசியாறியதில்லை

அன்னையர் தினம்போற்றும் பிள்ளைகளே கொஞ்சம் உற்று நோக்குங்கள் உங்கள் தந்ததையின் கண்களை அவருக்கும் கஷ்டத்தினால் சொட்டும் கண்ணீருண்டு

றஹ்னா பின்த் மகுனதுர் ரஹ்மான் ஹுதாயிய்யா இலங்கை தென் கிழக்கு பல்கலைகழகம் மருதமுனை

கருத்துகள்