பிறந்த தினம் இந்த நாளிலே! பாரதி இல்லை பார் தனிலே!
கொண்டாடுவோம் அவர் பிறந்த தினத்தை அவர் தெளித்த மணத்தை நட்கொள்கைகளை அழகாய் அணிந்திடுவோம்!
இனிய உலகினிலே "இல்லை என்ற சொல்லை இல்லையாக்கும் வேட்கை" அவர் கொண்டது! அவர் இல்லாததோடு எதற்கெடுத்தாலும் "இல்லை" என்றே உரைக்கின்றனர்! புரியாத மானுடம்!!
அவரது நாட்டுப் பற்று மொழி மற்றும் மதப் பற்று அதீத தன்னம்பிக்கை இன்னும் ஏராளம்!! அவர் வளர்த்த தமிழ் நாமும் வளர்ப்போம்!
துன்பங்களும் துயரங்களும் அவரைத் துரத்திடவே அவற்றைத் தூரத்தே துரத்தி விட்டவர் அவர்!
மானுடம் குடி கொண்டது ஆழமாக அவர் உள்ளத்தில் ! அதனால் தானோ "மானுடம் பயனுற வாழ வேண்டும்" என்றுரைத்தார் அவர்!
ஏழைகளை தோழமை செய்தவர்! வேதனைகள் பல சோதனை செய்திட அத்தனையையும் வென்று முடித்தவர்! தமிழ் வளர்த்தார் அவர்! நற் கொள்கைகள் பூண்டார்! அதனூடே வாழ்ந்தார் அவர்! நாமும் தமிழ் மறவோம்! இனிய செந்தமிழ் வளர்ப்போம்!
எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா SLPS-2 பஸ்யால
கருத்துகள்
கருத்துரையிடுக