தொப்பையான வாழ்வு

வட்டாரமெங்கும் தண்ணீரில் கண்டம்.

நாடு கிடைத்து விட்டது ‘தண்ணீர்த் தேசம்’

சந்து பொந்துகளில் தண்ணீர் செத்துக் கிடக்கிறது.

குப்பைன்று கொட்டியதில் வாழ்வு வழுக்கி விழுந்தது.

இரண்டாவதான ஓரு கருப்பை வாழ்வு இந்த தண்ணீர் பையில்.

அநாதையானோம் ஓர் அழையா விருந்தாளியால்.

மூச்சுத் திணறலில் தத்தளிக்கிறது உடமைகளும் எம் வாழ்வும்.

நீர் ஜாதி என்பதால் வழிகின்ற கண்ணீர்த் துளிகளும் உயிர் கொல்லி உருவத்தில்.

‘நீர்’ இஸ்ரேலி போல் ஒரு கொடூர ஆக்கிரமிப்பில்

எம். ரிஸான் ஸெய்ன்

கருத்துகள்