அனுபவத்தில் ஒரு குறிப்பு.
அது இதுபத்தி ஆறு மாணவர்கள் கொண்ட வகுப்பறை அன்று சரியாக 7.30 மணி இருக்கும் சிருஷ்டித்தவன் என்ற தலையங்கத்தில் ஒரு கிறுக்கல் வரையப்படுகிறது.
அவன் அமர்ந்ததிலிருந்து இரண்டு மேஜைகள் தள்ளி ஒரு கவிஞன் அமர்ந்திருக்கிறான். ஆசையாக அவன் எழுதிய அந்தக் கிறுக்கலை அவனுக்கு அருகாமையிலிருந்த நண்பனிடம் காண்பிக்கிறான். அதை வாசித்த அந்த நண்பன் அந்த கிறுக்களை இரண்டு மேசைகள் தள்ளி அமர்ந்திருந்த அந்த கவிஞரிடம் கொண்டுபோய் கொடுத்து வாசித்துப் பார்க்கும் படி பணிக்கிறார்.
அந்தக் கவிஞன் வாசிக்கிறான். பின்னர் யார் இதை எழுதியவர் என்று வினா தொடுத்து அந்தக் கிறுக்கலை வரைந்தவன் அவர்கள் இருந்த இடத்திற்கு அழைக்கப்படுகிறான். அவன் சென்றதன் பின் அவன் முகத்தைப் பார்த்து ஒரு ஏளனப் புன்னகை பூக்கிறது. பின்னர் சில வார்த்தைப் பிரயோகங்கள் அவர்களின் இதழ்களால் ஒதுக்கப்படுகிறது. அந்த நண்பன் கிறுக்கனை பார்த்து நீ கவிதை எழுத வேண்டுமானால் இதோ கவிஞர் இருக்கிறார் கேட்டுப் படித்துக் கொள் என்றான்.
வகுப்பறை நிறைவுபெற்று 25 மாணவர்கள் வெளிச் செல்ல ஒரு ஜீவன் மட்டும் மேசையில் தலைசாய்த்து கண்கள் குளமாகி இமைகளை வான்கதவுகள் ஆக்கி கண்ணீரை கசிய வைத்துக்கொண்டிருக்கிறான். அவன் எழுத்துக்கள் நான்கு சுவற்றுக்குள் நிராகரிக்கப்படுகிறது. அவன் அவ்விடத்தில் தோற்றுப் போகிறான். மன்னிக்கவும்
தோற்றத்திலிருந்து தொடக்கம் பெறுகிறான். அவனது பேனா காகிதத்தை வெறித்துப் பார்க்கிறது காலங்கள் ஓடுகிறது கவிதைகள் அவனிடத்தில் கைகோர்க்கிறது. புத்தகங்கள் ஆறுதல் கொடுத்தது புது உறவுகள் ஊக்கமளித்தது. பேனாமுனை உயிர்பெற்று பெரும் உலகத்தை உருவாக்க அவனுக்கு உதவி செய்கிறது. நாளடைவில் அவன் எழுத்துக்கள் வலிமை அடைகிறது.
இன்னும் ஒரு கவிஞர் அதைப் பார்க்கிறார் கனதி குறைவு என்கிறார். காலமும் மாறிப்போகிறது. இன்னும் ஒரு ஆசிரியர் அழைக்கிறார். உங்கள் கவிதைகள் தூக்கி எறியப்படும் இலக்கியத்தில் போய் சேர்ந்துவிடும் என பயப்படுகிறேன் என்றார். காரணம் புரிதலற்ற கனதி உன் கவிதையில் புகுந்துவிட்டது. சொற்கள் உருமாறி உருக்கமாக இருக்கிறது. கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள். தயக்கமான பேச்சு ஆனால் தாக்கமானதும் கூட.
ஏக்கத்தோடு எத்தனை விமர்சனங்கள் எத்தனை இன்னல்கள் தாண்டி தடைகள் உடைக்கப்படுகின்றன. வெளிநாட்டில் சில உறவுகள் கிடைத்தன. வெறிச்சோடிய அந்த வாழ்க்கை வேகமாய்ப் போனது. கவி குழுமங்களின் உறவுகள் அவனை தேடி வந்தது. காதல் கவி படித்தான், காலத்திற்கான கவியும் படித்தான், தாயைப் பற்றி தாராளமாக படித்தான். பத்திரிகை பக்கத்தில் சில கவிதைகள் பிரசுரிக்கப்பட்டன. பின்னர் அதை இடை நிறுத்திக் கொள்கிறான்.
அவன் கவிதைகளுக்கான கேள்வி அதிகரித்தது. அவனிடம் தொடர்புகொண்டு சிலர் கவிதையை பெற்றுக் கொண்டனர். மீண்டும் சிலகாலம் அவன் பேனா நிலைபெறுகிறது. உறவுகள் அழைத்தால் மட்டும் சில சமயம் உயிர் பெறுகிறது. ஒரு முறை அவன் ஒரு மேடையில் தேற்ற படுகிறான். கூலாங்கற்கள் உடன் இருந்தால்தான் மாணிக்கத்துக்கு பெறுமதி கூலான்கற்கள் எல்லாம் மாணிக்கமாக மாறிவிட்டாள் அந்த மாணிக்கத்திற்கு பெறுமதி கிடையாது. இவ்வாறு தொடர்ந்தது அவன் கலைப்பயணம். காரணமின்றி இடை நிறுத்தப்படுகிறது. தோற்றுக் கற்ற பாடம் ஒருபோதும் தோல்வியை தழுவிக் கொள்வதில்லை.
இன்னும் வாழ்க்கையில் மறக்கமுடியாத இரண்டு மேஜைகள் தாண்டி அமர்ந்திருந்த கவிஞர் அவன் உருவாக்கத்திற்கு உருவாவதற்கு உதவியவர் இப்போது அந்தக் கவிஞர் இவன் உருவாக்கத்தான் இவன் மூலம் ஊக்குவிக்கப்படுகிறார்கள் அவனிடம் தாராளமாக கவிஞர் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறுகிறான் இறைவன் இருக்கிறான் அவன் நினைத்தால் எதுவும் சாத்தியம் என்பதற்கு இந்த வாழ்க்கை சரிதை ஒரு பாடமாக இருக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக