கண்கள் மட்டும் கதை சொன்ன- நம் காதலைப் பாட கம்பரை அழைத்திருக்கிறேன்.
மாடியில் நின்று நோக்கிய மைதிலியின் மையல் என்னிலும் கண்டு காவியம் சொல்வான் அவன்.
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் இதயம் மாறி புக்கெய்திற்றென்று.
காலக் கோலம் மாற்றிவிடும் என்னழகை நிறுத்திவைக்க கோதமனை வரச்சொன்னேன். ராமன் வரும் வரை கல்லாகவே இருந்து விடுகிறேன்... சபித்துவிடு என்று.
ஆனாலும். கோகுலத்தில் ராதை நான் .. கூடிக் களித்த கோபியர் முகம் நோக்கி வெட்கிக்கிறேன்.... என் கண்ணன் இன்று ருக்மணி சொந்தம் என்று.
உன்னால் அட்சதைத்தூவி ஆசிர்வதிக்கப்பட்டவள் நான் ... அதனால் வரிகளால் மட்டுமே உன்னை ஆளமுடிகிறது என்னால்.
கருத்துகள்
கருத்துரையிடுக