இரவுகள் ஏனோ ஈசலின் ஆயுள் போல தொடங்கியதும் முடிகிறது பகல்கள் மட்டும் எங்கு சென்றாலும் கூடவே வரும் நிழலைப் போல விடாமல் துரத்துகிறது
விடிந்ததும் இயந்திர உலகில் கால் பதித்து நிமிரவும் முடியாமல் குனியவும் முடியாமல் மல்லாக்க சாயந்த மரக்கட்டைகளாக நீந்துகிறது
புளுக்கம் நிறைந்த பொழுதுகளில் உள்ளெங்கும் புகைவிட்டு ஆத்தும் முதியோனைப் போலவே நினைவலைகள் இரவை நனைக்கிறது
நட்சத்திரங்கள் அற்ற பகல்களில் நடந்து திரியும் மேகங்களும் சூனியம் செய்துகொண்டே வானில் தொங்கும்
சில நேரங்களில் தென்னை ஓலை மறைவில் தூரமாய் தூசிபடிந்த சூரியனின் துண்டொன்றும் தெரியலாம்
குளிர் காலங்களில் முதற் துளி பட்டதும் சிலிர்தெழும் மேனிபோல சிக்கெடுக்கும் இளசுகளின் கூச்சலில் சிலிர்த்துக்கொண்டெழுகிறது வெயிலின் கொடூரம்
நாளையும் புதிய பரிமாணம் கொண்டு மீண்டும் ரணமான ஒரு பகலை வழமை போல் நீயம் புவியில் பிறசவிப்பாய் இரவே!
முனையூரான் சப்னாத்
கருத்துகள்
கருத்துரையிடுக