பெண்

வருடங்கள் ஓடினாலும் பருவங்கள் மாறினாலும் மாறாத ஒன்று பெண்ணிற்கான சமூக விலக்குகள் ஆசைகள் அத்தனையும் பூட்டப்பட வேண்டும் அடுப்பங்கரைதான் அவளுக்கான ஒரு சொத்து இது தான் அவளது நியதி

வீடூ தாண்டினால் ஒழுக்கமற்றவள் உரிமைக்காக பேசினால் அடக்கமில்லாதவள் இத்தனையும் நினைத்து கண்ணீர் வடித்தால் பாசாஙகுகாரி என்று பட்டம் சூட்டுகின்றார்கள

இன்பங்கள் துறந்த துறவி அவள் அவளது இரவும் பகலும் அடுத்தவருக்காக மட்டும் கொடுக்க வேண்டும் இது தான் அவளது வித

அவளிற்கான கல்வி கனவாகவே போனது அவளிற்கான ஆசைகள் காற்றோடு பறந்து விட்டது இத்தனையும் தாண்டி வாழும் அவளும் ஒரு பெண் தான

சமூக விலக்குகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பது என் கோஷமல்ல மனிதம் மதிக்கப்பட வேண்டும் பெண்ணிற்க்கும் ஓர் மனமுண்டு

றஹ்னா பின்த் மஹ்னதுர் ரஹ்மான் ஹுதாயிய்ய மருதமுனை
 

கருத்துகள்