பெற்றோருக்காய்

உறவுகளின் கருவறையில் பெற்றவர்கள் பெற்றுவிட்டார் கற்றவராய்க் காண்பதற்கே கனவுகளோடு காத்திருக்கிறார்

வெள்ளத்திலே அள்ளுண்டு போகும் சருகாக அழிந்திடாமல் உள்ளத்திலே உயர்வான இலட்சியம் கொண்டு வாழ்ந்துவிடு

முன்னுரிமைச் சமூகத்தின் முதுகெழும்பாய் நின்று தூரநோக்கோடு துணிந்திடு துன்பங்களைக் களைந்திடு

ஈன்றோருக்காய் நீயும் சான்றோன் ஆகிடவே பொங்கி எழுந்து மங்காப் புகழினைத் தேடு

வித்தகராய் மாறும் முன்னே வீண்வம்பு புரிந்திடாமல் புத்தியாகக் கற்ற கல்வி புரிய வேண்டும் சாதனைகள்

பணத்துக்கான பசியல்ல கல்வி யுகத்திற்கான மாற்றமென உணர்ந்து மாட்சியோடு ஆட்சி செய்தே வாழும் காட்சியினைப் பார்ப்பவர்கள் பார்வைகளும் புருவங்களை உயர்த்திடனும்

நிலாக்கவி நதீரா முபீன் புத்தளம்

கருத்துகள்