பேசும் ஓவியங்கள்

வெண் சுவரில் தன் எண்ணங்களை வார்த்தை மொழியாது கதைகள் பேசும் ஓவியங்கள் ஆகிறது நம் நாடு

வண்ணங்கள் கொண்டு கோலங்கள் இடுகையில் சில சிற்றெரும்புகள் சிதைக்க தான் பார்க்கிறது நம்மை

கண்ணில் படும் இடங்களில் எல்லாம் கண்டபடி வரையாது மத வரையரை மதித்து வரை ஏறி மிதிக்கும் படி வரையாதே!

வாடிட்ட பூவுக்காக வளர்த்துவிட்ட செடியையே குற்றம் சொல்வது என்ன நியாயம்? வெறுப்பை காட்ட வழி தேடுவோர்க்கு இதுவு‌ம் ஒரு வழிதான் என்ன?

ஓவியமும் காவியமும் பேசிட்டால் கதைகளும் பேசும் கட்டுக்கதைகளும் உரைக்கும்

நாளை பிறக்கும் தலைமுறைக்கு ஓவியங்கள் நம் ஒற்றுமையை பேசட்டும் அப்போது வான் கடந்து செல்லும் நம் மதிப்பு!

கவிச்சாரல் சாரா புத்தளம்

கருத்துகள்