கணனி மடிக்கணினியான போது மருமகள் மகளா முடியாதா?
காகம் சகவாழ்வு நல்கையில் குடும்பங்கள் குரோதங்களை வெறுக்காதா?
மூலதனம் முடிவுப்பொருளாகையில் சீதனம் முடிவுக்கு வந்திடாதா?
தேனிக்கள் ராணி சொல் கேட்கையில் அரசியல் தலைமைகள் சீர் பெற்றிடாதா?
கரையான்களின் ஒற்றுமையில் புற்றுகள் கட்டப்படுகிறதெனின் இனநல்லினக்கத்தில் இலங்கையை கட்டியெழுப்ப இயலாதா?
சாகரங்களின் நீர் ஒற்றை சுவையில் இருக்க சமூதாயத்தில் சமத்துவம் நிலைத்திருக்காதா?
முட்கள் ரோஜாவில் பற்றுக்கொண்டு உடனிருக்க மக்கள் நாட்டின் மீது பற்றற்று வாழ்வதா?
முன்னுதாரணம் கண்முன் இருக்க முட்டுக்கட்டையை நாமேன் விதித்துக்கொள்கிறோம்.
சான்றுகள் சமர்பணம் செய்யப்பட்டிக்க சாதனைகளை புரியாமல் சான்றோரை இன்னுமேன் அலசுகிறோம்.
Asana Akbar Anuradhapura SEU Of Srilanka
கருத்துகள்
கருத்துரையிடுக