வருடங்கள் ஓடின வயதும் கடந்தன ஆனால் இன்னும் மாறவில்லை இந்த ரணங்கள்
உனக்கென ஓர் வலி வந்தால் உடைந்து போகும் பதுமை அவள் ஆனால் - அவள் முதுமை கண்டால் விரட்டுகிறாய் முதியோர் இல்லத்திற்க்கு
பத்துமாதமும் உனை பத்திரமாய் பார்த்தவளை மாதத்தில் ஒரு முறை - என கணக்கிட்டு பார்க்க செல்கிறாய்
அவள் இரவுகளும் பகலும் உனக்காய் போனது நீ அழுதிடும் வேளையில் இன்று அவளின் ஒவ்வொரு பொழுதும் தனித்து போனது அந்த முதியோர் இல்லத்தில்
உதிரத்தை பாலாக்கினால் என கம்பன் வரிகள் மட்டும் உன் சமூக வளைத்தளங்களில் ஏராளம் இன்று நீ அவளை சேர்த்த இடத்தில் நாளை உன்னையும் நான் காண வேண்டும் ஒரு தாயாக
ரஹ்னா பின்த் மஹ்னதுர் ரஹ்மான் (ஹுதாயிய்யா) மருதமுனை
கருத்துகள்
கருத்துரையிடுக