"வக்பு" பற்றிய ஓர் சுருக்கம்

நாம் இவ்வுலகில் வாழுகின்ற சந்தர்ப்பத்திலே அல்லாஹ்வின் மாளிகையாக இருக்கலாம் அல்லது ஒரு பொது இடமாக இருக்கலாம் அவ்விடங்களில் ஒரு பொருளையோ அல்லது அதற்கு ஒப்பான ஏதாவது விடயங்களயோ வக்பு செய்வது பற்றிய ஒரு தெளிவை நாம் சுருக்கமாக ஒவ்வொருவரும் புரிந்து கொள்வது நம்மீது கடமையாகும் அந்த வகையில் அல்லாஹ் அவனுடைய திருமரையில் கூறுகிறான்:

وَمَا تُنْفِقُوْا مِنْ خَيْرٍ فَلِاَنْفُسِكُمْ‌ وَمَا تُنْفِقُوْنَ اِلَّا ابْتِغَآءَ وَجْهِ اللّٰهِ‌ وَمَا تُنْفِقُوْا مِنْ خَيْرٍ يُّوَفَّ اِلَيْكُمْ وَاَنْـتُمْ لَا تُظْلَمُوْنَ‏

நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும்; அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்; நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப் -படமாட்டீர்கள். (அல்குர்ஆன் : 2:272)

வக்பு என்பது மார்க்கத்திலே முஸ்தஹப் என்கின்ற தரத்துக்கு கொண்டுவருகிறார்கள் மேலும் அல்லாஹ்வின் பாதையில் வக்பு செய்வது முபாஹ் என்ற ஒரு கருத்தும் சொல்லப்பட்டுள்ளது. வக்பு என்பது நிலையான தர்மங்களில் இருந்தும் ஒன்றாகும். அது மரணத்திற்கு பின்னரும் கூலியை பெற்றுத் தரக்கூடிய ஒரு நல்லமலாகும்.

அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதன் மரணித்து விட்டால் அனைத்து விடயங்களும் அவனை விட்டும் துண்டிக்கப்படுகின்றன மூன்று விடயங்களை தவிர நிலையான தர்மம், அவன் மூலம் பெறப்பட்ட பியோசனமான அறிவு, அவனுக்குப் பிறந்த சாலிஹான குழந்தை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

குடும்பத்தோடு தொடர்புபட்ட வக்புகள்
  1. பரம்பரைக்காக வக்பு செய்தல் - இதிலே ஆண் பிள்ளைகளின் பிள்ளைகளும் ,பெண் பிள்ளைகளின் பிள்ளைகளும் அடங்குவார்கள்.
  2. நெருங்கிய உறவினர்களுக்கு வக்பு செய்தல் - தாய் தந்தை புறத்திலிருந்து வரக்கூடிய உறவினர்கள்.

மேலே உள்ள குர்ஆன்,ஹதீஸில் இருந்து ஒவ்வொருவரும் தெளிவைப் பெற்று இருப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் அந்தவகையில் அன்புக்குரிய சகோதரர்களே நீங்கள் வக்பு செய்யும்பொழுது எந்த ஒரு பெருமைக்காகவும் செய்யாமல் தூய்மையான எண்ணத்தோடு ஒரு பள்ளிவாசலுக்கோ அல்லது மார்க்கக் கல்வியை கற்பதற்காக அல்லாஹ்வுடைய பாதையில் படித்துக்கொண்டிருக்கக்கூடிய மாணவர்களுக்கோ உங்களுடைய வக்குபுகளை நீங்கள் உரிய முறையில் நிறைவேற்றிக் கொள்ளுங்கள் ஏனென்றால் நாம் மரணித்ததிற்குப் பிறகு அவைகள் இந்த உலகத்தில் நிலையாக இருக்கும் போதெல்லாம் நமக்கு அதிகமான நன்மைகளை கூட்டித் தருகிறது அந்த வகையில் இவற்றை முறையாக நிறைவேற்ற கூடியவர்களாக நாம் ஒவ்வொருவரும் மாறவேண்டும் என்று கூறி இதனோடு முடித்துக்கொள்கின்றேன்.

Nijamhamy

கருத்துகள்